ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் முதல் சூப்பர் ஹீரோ அப்பாக்கள் தான்..!
ஒரு தந்தை தனது குடும்பத்திற்காக இரவும் பகலும் அயராது உழைக்கிறார் தந்தை.ஏனென்றால் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கவும், தனது குடும்பத்தை ஆதரிக்கவும் மட்டுமே.
இந்தியா உள்பட 52 நாடுகளில் இதே தேதியில் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. 'தந்தையர் தினம்' என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான, அர்த்தபூர்வமான ஒரு நாள் என்பதனை யாரும் மறுக்க முடியாது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பொறுப்பு எப்படி தாய்க்கு இருக்கிறதோ, அதேபோல் குழந்தைகளின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் தந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேய்வதுடன், கனிவான கண்டிப்பையும், மறைமுகமான பாசத்தையும் வெளிப்படுத்தும் தந்தையிடம் குழந்தைகளுக்கும் பாசம் எப்போதும் குறைந்து போய்விடுவதில்லை.
குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தி, தன்னலமற்ற அன்பின் அடையாளமாக திகழும் தந்தைகள் ஒவ்வொருவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட வேண்டியவர்கள் தான்.