கவர்ச்சியில் எல்லை மீறுகிறேனா? - ராஷ்மிகா விளக்கம்
@rashmika_mandanna
தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தியிலும் பிசியாக இருக்கிறார்.
@rashmika_mandanna
இந்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகு கவர்ச்சியாக தன்னை புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
@rashmika_mandanna
தற்போது ராஷ்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை சிலர் விமர்சித்து உள்ளனர்.
@rashmika_mandanna
இதற்கு பதில் அளித்து ராஷ்மிகா மந்தனா கூறும்போது, “ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும்.
@rashmika_mandanna
இது பெரியவர்கள் சொன்ன வாக்கு. நான் அதை கச்சிதமாக கடைபிடிக்கிறேன். பாலிவுட்டில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்க வேண்டும்.
@rashmika_mandanna
அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் வரும். ஆனாலும் நடிகையாக கவர்ச்சியில் எனக்கென்று சில எல்லைகள் உள்ளன. அவற்றை எப்போதும் மீறமாட்டேன்.
@rashmika_mandanna
எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும்'' என்றார்.
@rashmika_mandanna