மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவும் பயிற்சி முறைகள் ஏராளம் இருக்கின்றன. மன அழுத்தத்தை வியக்கத்தக்க வகையில் குறைக்கும் சில பயிற்சிகள் பற்றி பார்க்கலாம்.
தோட்டக்கலை: தினமும் அரை மணி நேரம் தோட்டக்கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் சுமார் 200 கலோரிகளை எரிக்க முடியும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும் ஆற்றல் தோட்டக்கலைக்கு உண்டு.
நடைப்பயிற்சி: இது மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்துவிடும். மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் டைப்-2 நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளை குறைக்கும்.
தாய் சீ: தாய் சீ என்பது சீன தற்காப்புக் கலைகளின் வடிவமாகும். இது உடல் இயக்கத்தை மன அழுத்தத்துடன் இணைக்கக்கூடியது. அன்றாட கவலைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கு இது உதவும்.
சர்க்யூட் பயிற்சி: ஒரே சமயத்தில் பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை சிறிது நேர இடைவெளியில் மேற்கொள்வது சர்க்யூட் பயிற்சி எனப்படும். அது உடலில் எண்டோமார்பின் அளவை 'பம்ப்' செய்து மன அழுத்தத்தை திறம்பட சமாளிக்கும்.
நடனம்: இசைக்கு ஈடு கொடுத்து நடனம் ஆடும்போது இதயத்துடிப்பு இயல்பாகவே அதிகரிக்கும். அப்படி இதயத்துடிப்பு அதிகரிப்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கு வழிவகை செய்யும்
யோகா: யோகா மூலம் மேற்கொள்ளப்படும் சில உடல் தோரணைகள் மன அழுத்தத்தை போக்க உதவும். அமைதியான மன நிலையை பெறவும் உதவும். உடல் மற்றும் மன வலிமையை சம நிலைப்படுத்தும். இதய செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணை புரியும்.
உத்தனாசனா எனப்படும் ஆசனம் உடலின் பின் பக்க தசைகளை இலகுவாக்கி மனதை அமைதிப்படுத்த உதவும். கடினமான யோகாசன பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவர்கள் பிராணயாமா பயிற்சியை முயற்சிக்கலாம்.