சிறந்த கண் பார்வைக்கு 6 சித்த மருத்துவ குறிப்புகள்..!
ஒய்.ஆர்.மானெக் ஷா
பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும்.
ஒய்.ஆர்.மானெக் ஷா
சந்திர தரிசனம்:-இரவில் சாப்பிட்டு கை, வாயை சுத்தம் செய்தபின்பு ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்த நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திர தரிசனம் செய்தல் நல்லது.
ஒய்.ஆர்.மானெக் ஷா
தலைக்கு வாரம் ஒருமுறை, சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணி தைலம்.. இவற்றில் ஒன்றை தேய்த்து குளிக்க வேண்டும்.
ஒய்.ஆர்.மானெக் ஷா
பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும்.
ஒய்.ஆர்.மானெக் ஷா
இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும், அதிகாலை 4-5 மணிக்கு எழும்ப பழக வேண்டும்.
ஒய்.ஆர்.மானெக் ஷா
தண்ணீர் தினமும் குறைந்தது 2 லிட்டர் குடிக்க வேண்டும். இது கண்களை வறண்டு போகாமல் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.