அட்ஜஸ்ட்மெண்ட்' பிரச்சினையை சந்தித்துள்ளீர்களா? - சிரித்துக்கொண்டே பதிலளித்த ராகினி திவேதி..!
@rraginidwivedi
தென்னிந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் ராகினி திவேதி, தமிழில் `அரியான்', `நிமிர்ந்து நில்', `கிக்', `இ-மெயில்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
@rraginidwivedi
தினத்தந்திக்கு ராகினி திவேதி அளித்த தித்திப்பான பேட்டி இதோ..
@rraginidwivedi
கேள்வி : நீங்க ஆர்மிக்காரர் பொண்ணு. எப்படி சினிமாவுக்குள் வந்தீர்கள்?
பதில் : அப்பா ஆர்மினா, பொண்ணு சினிமாவுக்கு வரக்கூடாதா? திடீரென எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது. விளம்பரங்களில் நடித்தேன். நிறைய புடவை விளம்பரங்களில் நடித்தேன். இந்த புகைப்படங்களை பார்த்து நடிகர் சுதீப் என்னை அழைத்தார். கன்னடத்தில் அவர் இயக்கி நடித்த `வீர மடகரி' படத்தில் அறிமுகமானேன். அப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன்.
@rraginidwivedi
கேள்வி : சினிமாவுக்கு வந்தபோது எது உங்களுக்கு சவாலான விஷயமாக அமைந்தது?
பதில் : மொழி தான். நான் கன்னட சினிமாவில் அறிமுகமானபோது, எனக்கு கன்னடமே தெரியாது. அது மிகவும் கஷ்டமாக அமைந்தது. அதன்பிறகு மொழியை கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.
@rraginidwivedi
கேள்வி : எத்தனை மொழிகள் உங்களுக்கு தெரியும்?
பதில் : தாய்மொழி இந்தி. ஆனாலும் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், பஞ்சாபி உள்ளிட்ட மொழிகள் அத்துப்படி.
@rraginidwivedi
கேள்வி : மத்திய பிரதேசத்தில் பிறந்திருந்தாலும், புடவை கட்டினால் அப்படியே தமிழ்நாட்டு பொண்ணு லுக் வந்துவிடுகிறது உங்களுக்கு?
பதில் : நிறைய பேர் அப்படித்தான் சொல்வார்கள். எனக்கு புடவை எடுப்பாக இருக்கும். புடவையில் `கிக்' ஏற்றும் `லுக்' எனக்கு. குறிப்பாக தென்னிந்திய பெண்கள் புடவை அணியும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@rraginidwivedi
கேள்வி : தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருக்கிறீர்கள். எந்த சினிமா உங்களுக்கு பிடிக்கும்?
பதில் : என்னை அறிமுகப்படுத்திய கன்னட சினிமா மீது கொஞ்சம் பற்றுதல் அதிகம். இந்த விஷயத்தில் பொய் சொல்ல விரும்பவில்லை.
@rraginidwivedi
கேள்வி : தமிழ் ரசிகர்களை செல்லமாக எப்படி கூப்பிடுவீர்கள்?
பதில் : `ஏ மச்சான்... வா மச்சான்...' என கூப்பிடுவேன். நல்லா இருக்கும்ல... (ஆர்வமாக கேட்கிறார்). மற்ற மொழிகளை விட தமிழ் மொழி கொஞ்சம் நல்லா இருக்கும்.
@rraginidwivedi
கேள்வி : எப்போதும் சிரிச்சுகிட்டே இருக்கீங்களே... உங்களை கோபப்படுத்தும் வகையில் விமர்சனம் வந்துள்ளதா?
பதில் : `உயரமான நடிகை' என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அது எனக்கு சோர்வை தந்தது கிடையாது. அதேவேளை உயரம் குறைவான நடிகர்களுடன் நடிக்கும்போது கொஞ்சம் சிரமம் இருக்கும். ஒரு கேரக்டருக்கு சூட் ஆகிறோமா... என்பது தான் மேட்டர். மற்றபடி உயரம், நிறம் என்பதெல்லாம் பிரச்சினையே இல்லை.
@rraginidwivedi
கேள்வி : `அட்ஜஸ்ட்மெண்ட்' பிரச்சினையை சந்தித்துள்ளீர்களா?
பதில் : அப்படி எந்த பிரச்சினையும் எனக்கு இதுவரை ஏற்பட்டது கிடையாது. அப்படி என்னை அணுகும் அளவுக்கு, விமர்சனம் வரும் மாதிரியான கேரக்டரும் எனக்கு கிடையாது. சிரித்துக்கொண்டே இருந்தால் அமைதியாக இருப்பேன் என்பது அர்த்தம் இல்லையே. ஒருவேளை யாராவது அப்படி வந்தால் நடப்பதே வேறு.
@rraginidwivedi
கேள்வி : சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்கு வரும் நடிகைகளுக்கு நீங்கள் தரும் `அட்வைஸ்' என்ன?
பதில் : மனதளவில் நடிகைகள் உறுதியாக இருந்தாலே போதும். எதையும் சந்திக்கலாம். கடந்து செல்லலாம். எந்தவித சிபாரிசும் இல்லாமல் `மெரிட்'ல வரும் நடிகைகளுக்கு `கிரெடிட்' தானாக வரும். அதேவேளை `ஓவர்நைட்'டில் எல்லாமே நடந்துவிட வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
@rraginidwivedi
கேள்வி : இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
பதில் : கே.திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி., அனுராக் காஷ்யப் உடன் `ஒன் 2 ஒன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். செல்வராகவன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடிக்கிறேன்.
@rraginidwivedi