இதயத்தை பாதிக்கும் உணவு பழக்கங்கள்...!
உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இனிப்பு உடலில் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி அதிக கலோரிகள் சேருவதற்கும் காரணமாகிவிடும். அதன் விளைவாக இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
காரமான உணவு இதயத்திற்கு நல்லதல்ல. காரத்தின் அளவு அதிகரிக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
உணவுப் பொருட்களில் அதிக அளவு எண்ணெய் மற்றும் மசாலா சேர்ந்திருப்பதும் இதயத்தை பாதிக்கும்.
உணவின் சுவையை கூட்டுவதற்காக உப்பை அதிகம் சேர்க்கக்கூடாது. அதனை அதிகமாக சேர்க்கும்போது ரத்த அழுத்தம் உயரும். இதய நோய் உருவாக இதுவே முக்கிய காரணமாகிவிடும்.
சைவ உணவுகளுடன் மீன், இறைச்சி வகைகளை தொடர்ச்சியாக சாப்பிடுவது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் இருக்கும் புரதங்கள், ஒமேகா-3 கொழுப்புகள் இதயத்திற்கு பலம் சேர்க்கும்.