உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கேழ்வரகு இட்லி..!
தேவையான பொருட்கள்: கேழ்வரகு - 1 டம்ளர், பச்சரிசி - 1 1/4 டம்ளர், புழுங்கல் அரிசி - 1 1/4 டம்ளர், உளுந்தம்பருப்பு- 3/4 டம்ளர், வெந்தயம் - 1 ஸ்பூன் ஆகிய பொருட்களை கழுவி ஊறவைக்கவும்.
மாலையில் நன்கு அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
காலையில் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லி ஊற்றி வேக வைக்கவும்.
மிருதுவான, சுவையான இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்த கேழ்வரகு இட்லி தயார்.