நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc) எனப்படும் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவை மற்றும் வாசனையை நாம் சரியாக உணர இது அவசியம்.
இது உடலில், தோல், கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் வலுவான தசைகளில் உள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகத்தின் தேவை அவசியமாகிறது.