பலவித புற்றுநோய்கள், எதனால் ஏற்படுகின்றன என்பது இன்று வரை அறுதியிட்டு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், சில வகை உணவுகள், புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருவாடு: உப்பிட்டு தயாரிக்கப்படும் மீன் கருவாட்டில், நைட்ரோசாமைகள் உள்ளன. இவை மூக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்.
புகையில் சமைக்கப்பட்ட இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளன. இது வயிறு புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
ஊறுகாய்: ஊறுகாய்களில் அதிகளவில் சோடியம் உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவே ஊறுகாய் உபயோகிப்பது நல்லது. ஊறுகாய் அதிகளவு உட்கொள்வது, வயிற்றில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்ப்பை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவப்பு இறைச்சி: 'சிவப்பு இறைச்சி' எனப்படும் விலங்கு இறைச்சியை அதிகம் உட்கொள்வது. குடல் புற்றுநோய் அபாயத்தை உண்டாக்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை: இவை இன்சுலின் அளவை அதிகரிக்கக் கூடியது. இது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டலாம்.
'மைக்ரோவேவ்' பாப்கார்ன்: மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில், பெர்ப்ளூரோக் டானாயிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடியதாக கருதப்படுகிறது.
ஹைட்ரஜனேற்ற எண்ணெய்: உணவுகள் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள், பிரீ ரேடிக்கில்களை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கார்பனேற்ற குளிர்பானங்கள்: கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இதனால் கணைய புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.