குழந்தைகளின் மனச்சோர்வை குறைக்க உதவும் உணவு வகைகள்!

பெரியவர்களை போல குழந்தைகளுக்கும் மனச்சோர்வு ஏற்படும். அத்தகைய மனச்சோர்வை ஒருசில உணவுப்பொருட்களை உட்கொள்வதன் மூலம் குறைக்கலாம்.
சாக்லேட்: மனச்சோர்வு குறைய சாக்லேட் ஒரு சிறந்த உணவு. ஏனெனில் சாக்லேட்டில் அதிகமாக ஆன்டி-டிப்ரசன் பொருள் உள்ளது.
சாக்லேட் சாப்பிடும்போது மனதிற்கு ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும் இதில் வைட்டமின்-பி இருப்பதால் மூளையை ஆரோக்கியமாகவும் வைக்கும்.
பாதாம் பருப்பு: இதில் அதிக அளவில் மக்னீசியம் உள்ளது. உடலில் மக்னீசியமானது குறைவாக இருந்தால் நரம்புகளில் கோளாறு ஏற்பட்டு, இதனால் மனச்சோர்வு வரும்.
மேலும் காராமணி, பசலைக் கீரை மற்றும் உருளைக் கிழங்கிலும் மக்னீசியம் அதிகமாக உள்ளது.
கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உண்பதால் உடலானது 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதோடு, புத்துணர்ச்சியும் பெறும்.
குழப்பமான மனநிலையில் இருக்கும் குழந்தைகளின் உணவில் பால் அல்லது பால் சம்பந்தமான பொருளான தயிரை அதிகம் சேர்க்கலாம்.
பாலில் அதிகமாக ஒமேகா-3 இருப்பதால், இது உடலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தேவையில்லாத எண்ணங்களால் ஏற்படும் மனச்சோர்வும் அகலும்.
முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளது, இவை மனச்சோர்வை குறைக்க உதவும்.