உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்..!
குடை மிளகாவில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. 100 கிராம் குடைமிளகாவில் 50 கலோரிகள் இருக்கிறது.
ஆப்பிள் பழத்தில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. ஆப்பிளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையையும் சீராக பராமரிக்கலாம்.
முட்டைக்கோசில் இருக்கும் வைட்டமின்களும், தாதுக்களும் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை. மேலும் முட்டைக்கோசில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்க துணை புரியும்.
கீரைகளில் இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. கீரைகள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
காளான் வயிற்றில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு மற்றும் அதிக கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. கேரட் உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி உடல் எடை குறைக்க வழிவகுக்கும்.