காலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம்.
வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.
வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
பொதுவாக வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும். டாக்டர் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.
எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்
காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும்.
குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும். அதன் காரணமாக உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும்.