இரவில் தூங்க செல்லும் முன் தொடக்கூடாத உணவுகள்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?
வெறும் வயிற்றிலோ அல்லது தூங்குவதற்கு முன்போ தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தயிர், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தி தூக்கத்தை சீர்குலைத்துவிடும்.
தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அதிக அமிலத்தன்மை இருப்பதால் அதனை இரவில் தவிர்க்க வேண்டும்.
இரவில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகரிக்க செய்யலாம். அதனால் ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும்.
இரவில் மது அருந்துவது தூக்க சுழற்சிக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். நிம்மதியாக தூங்கி எழ முடியாது.
ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
இரவில் மிளகாய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் காரமான உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தூக்கத்தை குறைக்கும்.
இனிப்பு அதிகம் கலந்து தயாரிக்கப்படும் தானிய வகை உணவுகளை இரவில் உட்கொள்வது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யலாம். அல்லது சர்க்கரையின் அளவை வீழ்ச்சியடைய வைக்கலாம்.
இரவில் வெங்காய சாலட் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அழுத்தத்தையும், வாயு தொந்தரவையும் உருவாக்கலாம். தொண்டைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.