குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு..பெற்றோர்களின் பங்கு!!
பாதுகாப்பு : பாதுகாப்பான மற்றும் ஆதரவான வீட்டு சூழல் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையானதாகும். பெற்றோருடன் பாதுகாப்பான தொடர்பையும், பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்ளும் சூழலில் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
விளையாட்டு: குழந்தைகள் தங்களின் திறன் மற்றும் உடல் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான சூழலை விளையாட்டு வழங்குகிறது.
நட்புகள் : சக உறவுகள் மற்றும் சக நண்பர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு அதிக ஆதரவும், மதிப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சமச்சீர் ஊட்டச்சத்து : குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சமச்சீரான, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு முக்கியமானது.
சுதந்திரம் : குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட விடுவதும், அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு ஊக்குவிப்பதும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
குடும்ப நேரம் : குடும்பத்தினருடன் தவறாமல் நேரத்தை செலவிடும் குழந்தைகள் அதிக மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் வாழ்கிறது.