வெளிநாட்டு சுற்றுலா..தாய்லாந்தை அதிகம் விரும்பும் இந்தியர்கள்...!
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் இந்தியர்களின் விருப்ப தேர்வு பட்டியலில் தாய்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது.
தாய்லாந்து செல்வதற்கு விசா கட்டாயமில்லை. அங்கு சென்ற பிறகு ‘விசா ஆன் அரைவல்’ என்ற நடைமுறையை பின்பற்றி எளிய முறையில் விசா அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் (ஜூன் வரை) 1 கோடியே 75 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு படையெடுத்திருக்கிறார்கள்.
இதில் இந்தியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து சென்ற பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.
கொரோனாவுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. அதாவது 2019-ம் ஆண்டு சுமார் 4 கோடி சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு வருகை தந்தனர்.
அந்த எண்ணிக்கையையும் கடந்து சுற்றுலா பயணிகளை கூடுதலாக வரவழைக்க வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது.