மீனாட்சி அம்மன் முதல் கள்ளழகர் வரை..மதுரைக்கு ஒரு விசிட் போடுங்க..!
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்: மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது . இது முருகனின் ஆறுபடை வீடுகளின் முதலாவது படை வீடாகும்.
மீனாட்சி அம்மன் கோவில் : இந்த கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகும். இக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். மேலும் பல அதிசயங்களை கண்முன் நிறுத்தும் தலமாகும்.
திருமலை நாயக்கர் அரண்மனை : மதுரையை ஆண்ட நாயக்கர்களில் புகழ்பெற்று விளங்கிய திருமலை நாயக்கர் மன்னரால் கட்டப்பட்ட மாபெரும் அரண்மனையாகும். இது மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ளது.
காந்தி அருங்காட்சியகம் : இங்கு மகாத்மா காந்தி பற்றிய புகைப்படக் காட்சியும், இந்திய விடுதலைப் போரின் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இது மாணவர்கள்,குழந்தைகள் பார்க்க வேண்டிய முக்கிய இடமாகும்.
தெப்பக்குளம் : மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.அங்கு புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
அழகர் கோவில்: மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சித்திரைத் திருவிழாவின்போது இந்தக் கோவிலில் இருந்துதான் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் புறப்படுவார்.