பெரிய கோவில் முதல் அரண்மனை வரை..தஞ்சாவூருக்கு ஒரு விசிட் போடுங்க..!
பெரிய கோவில் : ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இதை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.
தஞ்சை அரண்மனை : இது தஞ்சாவூர் நகரில் உள்ள முக்கியமான அரண்மனையாகும். இந்த அரண்மனை தஞ்சையை ஆண்ட நாயக்கர்களால் கட்டப்பட்டது. இது சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
பூண்டி மாதா பேராலயம் : தஞ்சாவூரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த மாதா பேராலயத்தில் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களும் சென்று வழிபட்டு வருகின்றனர். இங்கு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
சிவகங்கை பூங்கா : இது தஞ்சை பெரிய கோவிலின் அருகே அமைந்துள்ள பொழுதுபோக்கு பூங்காவாகும். இங்கு சிறுவர்களை கவரும் வகையில் மோட்டார் படகு, நீச்சல் குளம், பொம்மை ரெயில் போன்ற விளையாட்டு அம்சங்கள் நிறைந்துள்ளன.
தென்பெரம்பூர் அணை : இந்த அணை தஞ்சை நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் பாயும் தென்பெரம்பூர் அணைப்பகுதியில் காணக்கிடைக்காத காட்சிகளை இங்கு நீங்கள் கண்டு ரசிக்கலாம்.