மழைக்காலத்தில் பழங்களைத் தவிர்க்க வேண்டியதில்லை, ஆனால் சில பழங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பழங்களை சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவி, சுத்தமாக வெட்டி சாப்பிடவும். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மழைக்காலத்தில் முலாம்பழம் வேகமாக புளித்து பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும். இதன் காரணமாக தவிர்ப்பது நல்லது.
பலாப்பழம் அதிகளவு சர்க்கரையைக் கொண்டுள்ளது. இது மழைக்காலங்களில் செரிமானம் ஆவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
வாழைப்பழம் :மழைக்காலங்களில் சேமித்து வைக்கும்போது அவை பூஞ்சை வளர்ச்சிக்கு ஆளாகின்றன. மேலும் ஈரப்பதமான வானிலையில் மிக விரைவாக பழுத்து விடும். அதிகமாக பழுத்தவை வீக்கம் அல்லது அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
அன்னாசிப்பழம்: மழைக்காலங்களில் பொதுவாக ஏற்படும் சளி, இருமலை அதிகரிக்க செய்யும். அமிலத்தன்மை கொண்ட இது வயிற்றை தொந்தரவு செய்யலாம்.
லிச்சி விரைவாக புளிக்கக்கூடியது மற்றும் புதிதாக சாப்பிடாவிட்டால் வயிற்று உபாதைக்கு வழிவகுக்கும். மழைக்காலங்களில், அவை விரைவாக கெட்டுப்போகின்றன.
மாம்பழம்: மழைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகமாக்கும், மேலும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்