தேவையான பொருட்கள் : அரிசி மாவு, நெய், வெள்ளை எள்ளு, துருவிய தேங்காய், வெல்லம் ஏலக்காய் தூள், உப்பு, நல்லெண்ணெய்
எள்ளை ஒரு கடாயில் பொன்னிறமாகும் வரை வறுத்து, பின் தனியாக வைக்கவும். பின்பு கடாயில், நெய் சேர்த்து, துருவிய தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
கடாயில் வெல்லத்தை சேர்த்து, அது முழுவதுமாக உருகும் வரை வதக்கவும், வெல்லம் முழுவதுமாக உருகியதும், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு இந்த கலவையில் வறுத்த எள்ளைச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, கூடுதல் சுவைக்காக நெய் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை எடுத்து, அதில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதை நன்கு கலந்தவுடன், சூடான நீரை ஊற்றி, சிறிது எண்ணெய் சேர்த்து மாவை பிசையவும்.
மாவில் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும். பின்னர் ஒரு அச்சை எடுத்து அதில் அரிசி மாவை வைத்து நடுவில் தேங்காய் பூரணம் வைத்து அடுக்கவும்.
சிறிது மாவைக் கொண்டு வெளிப்புறப் பகுதியை முழுவதுமாக மூடி, அச்சுகளைத் திறக்கவும். அனைத்தையும் இதேபோல் தயார் செய்து, எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், இட்லி தட்டில் கொழுக்கட்டையை வைத்து, மூடி, 10 நிமிடம் வேகவைக்கவும்.