தமிழில் பாய்ஸ், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் படங்களில் நடித்துள்ள ஜெனிலியா தெலுங்கு, இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக உயர்ந்தார்.

Instagram: geneliad
2012-ல் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை.
Instagram: geneliad
ஒன்றிரண்டு படங்களில் கவுரவ தோற்றத்தில் தலைகாட்டினார். ஜெனிலியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
Instagram: geneliad
10 வருடங்களுக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
Instagram: geneliad
வேத் என்ற மராத்தி மொழி படத்தில் நடிக்கிறார். கன்னட படமொன்றிலும் நடிக்கிறார்.
Instagram: geneliad
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரம் பதற்றமாகவும் இருக்கிறது. எனது நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க விரும்புகிறேன்.
Instagram: geneliad
நான் நடிக்க எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் நடிக்க வேண்டிய நேர அட்டவணையை திட்டமிடுவது முக்கியம்.
Instagram: geneliad
நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது அவர் வீட்டு வேலைகளை கவனிப்பார் என்றார்.
Instagram: geneliad