மன அழுத்தத்தை போக்கும் இஞ்சி டீ..!
இஞ்சி டீ குமட்டல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் தன்மைகொண்டது.
இஞ்சி டீ உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை எளிதில் உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை தூண்டுவதற்கும் உதவுகிறது.
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தசை மற்றும் மூட்டு பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகும்.
சுவாச பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதில் இஞ்சி டீ முக்கிய பங்காற்றுகிறது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும் தமனிகளில் உருவாகும் கொழுப்பு படிவதை இஞ்சி தடுக்கிறது.
இஞ்சி டீயில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
மாதவிடாய் வலியால் அவதிப்படும் அனைத்து பெண்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
இஞ்சி டீ மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும்.