அருமையான பீனட் பிரான் ரெசிபி..!

metaAI
சண்டே என்றாலே வீட்டில் எதாவது அசைவ உணவு செய்வது வழக்கம். இந்த வாரம் புதுவிதமான டிஷ் செய்து பார்க்கலாம் வாங்க.!
metaAI
தேவையான பொருட்கள்: இறால்கள் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 5 முதல் 6 எண் வேர்க் கடலை - 50 கிராம் முந்திரி - 7 ,பிரிஞ்சி இலைகள் - 2 கிராம்பு - 2 இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம் பச்சை ஏலக்காய் - 2 எண்ணெய் - தேவையான அளவு. கொத்தமல்லி - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு.
metaAI
செய்முறை: வேர்க்கடலையை சிறிது நேரம் (20 நிமிடம்) ஊறவைத்து பின்னர் அதை ஒரு மிக்ஸர் ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
metaAI
ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி சூடானதும், இலவங்கப்ட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
metaAI
பின்னர் முந்திரியை சேர்க்கவும், பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு வதக்கவும்.
metaAI
இறால் நன்றாக வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை விழுதை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
metaAI
இறுதியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
metaAI
Explore