ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கிரீன்’ ஆப்பிள்..!
‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி பார்க்கலாம்.
இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை.
கிரீன் ஆப்பிள் அதிக அளவு நார்ச்சத்துகள் கொண்டுள்ளன. இவை குடல் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
கிரீன் ஆப்பிள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகும். இது ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது
இதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், குடலில் தங்கும் கிருமிகள் மற்றும் நச்சுகளை அகற்றி குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.
உடலின் மிக முக்கியச் செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. இது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
கிரீன் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிரீன் ஆப்பிள் எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல்.லை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.
நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும், ஞாபக சக்தி பிரச்சினையை உண்டாக்கும் அல்சைமர் நோயை தடுக்கும் பண்புகளை கிரீன் ஆப்பிள் கொண்டிருக்கிறது.