எந்த நேரமும் காதுல ஹெட் போனா? இது உங்களுக்குத்தான்.!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கழுத்துகளிலும், காதுகளிலும் நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்ப சாதனமாக உள்ளது ஹட்போன்கள்.
பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதன் விளைவு தான், இன்றைக்கு பல விதமான மாடல்களில் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் பல ஹெட்போன்கள் சந்தைகளில் விற்பனையாகிறது.
மாறிவரும் அப்டேட்டுகளைப் பழக்கப்படுத்திக் கொள்வது ஒருபுறம் நன்மை தான் என்றாலும், இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சற்று யோசிக்க வேண்டும்.
ஹெட்போன்களைப் பயன்படுத்தும் போது காதுகளில் பாதிப்பை ஏற்படுத்துதோடு இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்கும் போது, பாடல்களுக்கு ஏற்ப இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக உபயோகிக்கும் போது இதய பாதிப்பு ஏற்படக்கூடும்.
காலை முதல் இரவு வரை பாடல்களைக் கேட்பதற்கு மற்றும் பேசுவதற்கு என ஹெட்போன்களைப் பயன்படுத்துவதால் செவியில் உள்ள ஜவ்வு பாதிக்கப்படுகிறது. நாளடைவில் காது கேட்கும் திறனும் குறையக்கூடும்.
ஹெட்போன்களில் இருந்து வரக்கூடிய மின்காந்த அலைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது தலைவலி பிரச்சனை ஏற்படக்கூடும்.
ஹெட்போன்களில் இருந்து வரக்கூடிய மின்காந்த அலைகள் அனைத்தும் நமது மூளைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அளவுக்கு அதிகமாக ஹெட்போன்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.