அன்றாட வாழ்வில் அத்திப்பழத்தைச் சேர்ப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்...!
அத்திப்பழத்தில், அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது.
அத்திப்பழத்தில், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன.இவை ரத்த நாளங்களின் செயல்பாடுகளை அதிகரிப்பதால் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
அத்திப்பழத்தில், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்பு உருவாக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
அத்திப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இவை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகின்றது.
அத்திப்பழத்தில், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்கள் இருப்பதால் இவை சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தோன்றுவதை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அத்திப்பழத்தில், சுவாச பிரச்சினைகளுக்கு நன்மை பயக்கும் குவெர்செடின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் இருப்பதால் ஆஸ்துமா போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.
அத்திப்பழத்தில்,வைட்டமின் சி, துத்தநாகம் போன்ற தாதுக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது