புற்றுநோய் முதல் கண்பார்வை வரை முட்டைகோஸின் ஆரோக்கிய நன்மைகள்..!
முட்டைகோஸில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முட்டைகோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைகோஸில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைகோஸில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
முட்டைகோஸில் வைட்டமின் கே, ஆந்தோசயினின்கள் மற்றும் அயோடின் ஆகியவை நிறைந்துள்ளன. இவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைகோஸ் சல்பர் சேர்மங்களைக் கொண்டுள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்து கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க உதவுகின்றது.
பெண்களின் இறுதி மாதவிடாய் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும் தன்மைக்கொண்டது.
முட்டைகோஸ் உடலில் நல்ல வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. மேலும் சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும் தன்மைக்கொண்டது.