வெற்றிலை, பாக்கு போடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தமிழ் கலாசாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழர்களின் அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களிலும் தவறாமல் இந்த வெற்றிலை, பாக்கு இடம்பெறும்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றாவதாய் ஊறும் நீர் அமிர்தம் என்றும் கூறுகிறது சித்த மருத்துவம்.
மலச்சிக்கல் இருந்தால் தாம்பூலத்துடன், கொஞ்சம் பாக்கை அதிகம் சேர்க்க வேண்டும். வாய் நாற்றம் உள்ளவர்கள் கிராம்பு , ஏலக்காய் பயன்படுத்த வேண்டும்.
வெற்றிலை போடுவதால், ஈறு வலி, ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை நீக்கும். அதுமட்டுமல்லாமல், பற்களை கெட்டியாக பிடிக்க ஈறுகளுக்கு உதவி செய்யும்.
வெற்றிலையில் இருக்கும் ஆண்ட்டி பாக்டீரியல் பண்புகள் சருமத்தில் ஏற்பட கூடிய அரிப்பு மற்றும் அலர்ஜியை குணப்படுத்துகிறது. இதிலிருக்கும் கிருமிநாசினிகள் இதர சரும பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
தினமும் வெற்றிலைகளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் நமது செரிமான ஆரோக்கியம் மேம்படும், அதனால் தான் சாப்பிட்டு முடித்த பின்னர் வெற்றிலை போடுவதை அக்காலம் முதல் வழக்கமாக வைத்துள்ளனர்.
வெற்றிலையில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் இதனை தினமும் சாப்பிட்டு வருவதால் எலும்புகள் வலுப்பெறும்
வெற்றிலை சாப்பிடும்போது ரத்த ஓட்டம் சீராகும், எலும்புகளுக்கு உறுதி கிடைக்கும், மூட்டு வலி இருக்காது, எலும்பு தேய்மானம் இருக்காது, மேலும் இது ரத்ததை சுத்திகரிக்க செய்கிறது.