கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன.
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.
ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும்
தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளியில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், சளி வெளியேறிவிடும்.