வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
வெள்ளை சர்க்கரையைப் போல வெல்லம் நேரடியாக உடனடியாக ரத்தத்தில் கலக்காமல் நீண்ட நேரம் சக்தியைத் தரக்கூடியது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக உயர்வது தடுக்கப்படும்.
வெல்லம் உடலின் நொதிகளை ஊக்குவித்து, ஜீரண மண்டலத்தை மேம்படுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
சளித்தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்கள் வெல்லத்தை வெந்நீரில் அல்லது டீயில் கரைத்து அருந்தலாம்.
வெல்லம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், வயிற்றை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுவதால் பல்வேறு நோய்களைத் தடுத்து கோடைகாலத்துக்கு ஏற்ற உணவுப் பொருளாக உள்ளது.
ரத்தத்தில் தேவையான அளவு சிவப்பணுக்களைப் பராமரிக்க உதவுவதன் மூலம் வெல்லம் உடல் சோர்வடைவதைத் தடுக்கிறது.
வெல்லத்தில் நிறைந்து காணப்படும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் கனிமச் சத்துகளும் இயற்கை எதிர்வினைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கின்றன.
இதில் நிறைந்திருக்கும் அதிக அளவு மக்னீசியம் உட்பொருள், தொண்டைப் புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம், உடலில் அமிலங்களின் அளவை சரிவரப் பராமரிக்க உதவுவதால் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருக்க வழிசெய்கிறது.