எலும்புகளை வலிமையாக்கும்: தயிரில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்க உதவும். மேலும் கீல்வாதத்தை தடுக்கும்.
இதயத்திற்கு நல்லது: தினமும் தயிர் சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் குறையும். கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகுக்கும்.
பளபளப்பான சருமம்: தயிர் சிறந்த பிளீச்சிங்காக செயல்பட்டு சரும அழகை மெருகேற்றும். ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலை பெறவும் தயிரை உபயோகப்படுத்தலாம்.
செரிமானம்: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. மேலும் நொதித்தல் செயல்பாட்டின் போது லாக்டோஸ் உடைக்கப்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
நோய் எதிர்ப்பு சக்தி: தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். புரோபயாடிக்குகள் பல நோய்த்தொற்றுகளை தடுக்கும் தன்மை கொண்டவை. ஒட்டுமொத்தமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடியவை.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்: ‘கிரீக் யோகர்ட்’ எனப்படும் தயிர் இதய நோய் அபாயத்தை குறைப்பதாகவும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொடுகை நீக்கும்: பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக தயிர் அமைந்திருக்கிறது. தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், பொடுகை நீக்க சிறந்த தீர்வாக அமைகிறது.
ஆற்றல் அளிக்கும்: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த தயிர் உடலுக்கு ஊக்க சக்தியை அதிகரிக்கும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்கிறது. உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடுவதற்கு சிறந்த உணவாக தயிர் கருதப்படுகிறது.