ஆரோக்கியம் நிறைந்த ஆட்டுக்கால் மிளகு ரசம் செய்முறை!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: ஆட்டுக்கால், சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய், தனியா, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், வெண்ணெய், நெய், கொத்தமல்லி, உப்பு
Photo: MetaAI
செய்முறை: சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
Photo: MetaAI
ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்த துண்டுகளாக்கி கொள்ளவும்.
Photo: MetaAI
சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி, மூன்றையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
Photo: MetaAI
வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
Photo: MetaAI
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் இடித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை போட்டு வதக்கவும்.
Photo: MetaAI
அடுத்து அதில் மசாலா பொடி, மஞ்சள் தூள், மட்டன் கால் துண்டுகளை போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
Photo: MetaAI
இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.
Photo: MetaAI
Explore