ஹோலி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் பரவலாக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நாளில் பல்வேறு வண்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகளைப் பரிமாறி மக்கள் மகிழ்வார்கள்.
இந்த ஆண்டு வரும் மார்ச் 14-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருவர் மீது ஒருவர் வண்ணங்கள் கலந்து பொடிகளை நீரில் கலந்து தெளித்து விளையாடி மகிழ்வது இந்நாளின் வழக்கமாகும்.
ஹோலி பண்டிகையானது கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடிய நாள் என்றும், ராதாவும் - கிருஷ்ணரும் விளையாடிய நாளென்றும் நம்பப்படுகிறது.
நாட்டில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று ஹோலி. வெவ்வேறு மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி இந்த அழகான திருவிழாவை வண்ணங்களில் மூழ்கிக் கைகோர்த்துக் கொண்டாடுகிறார்கள்.
ஹோலியின் உண்மையான சாராம்சத்தைப் புரிந்துகொள்வதும் முக்கியம், அது என்னவென்றால் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துதல்.
ஆனால் தற்போது மிகவும் தீங்கு விளைவிக்கும் ரசாயன அடிப்படையிலான வண்ணங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.