திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாண்புமிகு பிரதமர் மோடி..!
முதலில் பாரதிதாசன் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
அங்குள்ள மாணவர்களை கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி.
தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது நிகழ்ச்சி.
பிரதமர் மோடி பேசிய பொது, பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பின்பு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி
பின்னர் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டிற்கு ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.