சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு... 10 நிமிடம் போதும்..!!
வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்பு வெண்டைக்காயை உப்பு போட்டு எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
போதுமான அளவு தேங்காய், மஞ்சள் பொடி, சீரகம், இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வைக்கவும்
அடுத்து தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலாவை அதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதனிடையே எண்ணெய், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.
பின்னர் வதக்கிய வெண்டைக்காயையும், தாளிப்பையும் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள். பின் அதை தயிரில் சேர்த்து கலந்துவிடுங்கள்.
பின் அதை அப்படியே அடுப்பில் வைத்து கொதிக்க நுரை கிளம்பும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள் அல்லது கொதிக்க வைக்காமல் அப்படியேவும் சாப்பிடலாம்.