கருப்பட்டி போலியா..ஒரிஜினலா எப்படி கண்டறிவது?
கருப்பட்டியை கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத்தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.
மெல்லும் போது, வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி.
முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும்.ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.
கருப்பட்டி சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி.
கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது ஒரிஜினல் கருப்பட்டி.
கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி கருப்பட்டி.