ஒரு நாயை நேருக்கு நேர் அதன் கண்களை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
ஒரு குரைக்கும் நாய் உங்களை நெருங்கினால், அதனை நோக்கி கைகளை நீட்டாமல், கைகளை இணக்கமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
நாய் உங்களை நெருங்கும்போது கற்கள் மற்றும் கம்புகளை பயன்படுத்தக்கூடாது.
உறுமும் நாய் உங்கள் அருகில் நெருங்கினால், எதுவும் செய்யாமல் ஒரு மரத்தைப் போல் அசையாமல் நிற்க வேண்டும்.
நாய் உங்களை மோப்பம் பிடிக்க அனுமதிக்க வேண்டும். அப்படி செய்கையில், அது உங்கள் வாசனையை நுகர்ந்துவிட்டு நகர்ந்து சென்றுவிடும்.
ஒருவேளை உங்களை நாய் கடிக்க வந்துவிட்டால், உடலை சுருக்கி முகத்தை மறைத்து சுருண்டு படுத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் முகம் , உடல் காயமடையாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.