வாஷிங்மெஷினின் கொள்ளளவை பொறுத்தே துணிகளை துவைத்தால், தான் இயந்திரத்தில் கோளாறு ஏற்படாமல் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் திரவங்களை ஊற்றும் டிராயர்களை மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
பில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் உள்ளே செல்வதற்கும், வெளியேறுவதற்கும் சிக்கல் ஏற்படுக்கூடும்.
வாஷிங்மெஷின்களில் உள்ள டிரம்மை மாதம் ஒருமுறை துணிகள் ஏதுவுமின்றி, டிரம்மில் சுடுதண்ணீர் நிரப்பி அதில் வினிகர் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
துணி துவைத்த பிறகு வாஷிங் மற்றும் ஸ்பின் பகுதிகளைத் திறந்தே வைக்க வேண்டும்.இதன்மூலம் உட்புறம் காற்று சென்று துர்நாற்றம் வீசுவதை தடுக்க முடியும்.
வாஷிங்மெஷினை இயக்கும் ஒவ்வொரு முறையும், அதன் குழாய்களை சோதித்த பின்னரே இயக்க வேண்டும்.
குழாயில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தண்ணீர் செல்வது தடைப்பட்டு, இயந்திரம் பழுதாகலாம்.