வெளுத்து வாங்கும் வெயில்...ஏ.சி.யை பராமரிப்பது எப்படி?
சரியான கால இடைவெளியில் ஏ.சி.யை பழுதுபார்ப்பது அவசியம்.
இரவு பகலாக ஏ.சி.யை பயன்படுத்தும்போது, அறையில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து, திரைச்சீலைகளைக் கொண்டு மூடி பயன்படுத்த வேண்டும்.
ஏ.சி. 24 டிகிரிக்கு மேல் வெப்பநிலையில் இயங்க வேண்டும்.
ஏ.சி. பயன்படுத்தும் அறையில் இரும்பால் செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை, ஏ.சி.யின் காற்று வடிகட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
புத்தகங்கள், துணிகள் போன்றவற்றை ஏ.சி. இயந்திரத்தின் நேர் எதிரே இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் வடியும் குழாயை சரியான முறையில் வடிகாலோடு இணைக்க வேண்டும்.
வடிகுழாய் மேலும் கீழும் இருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் மீண்டும் ஏ.சி. இயந்திரத்துக்கே வந்து, அறைக்குள் கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
இந்த குறிப்புகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஏ.சி.யின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்துவதோடு, மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும்.