மழைக்கு இதமான மாலை நேர மசாலா பஜ்ஜி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :கடலை மாவு, பஜ்ஜி மிளகாய், வெங்காயம், வரமிளகாய், பூண்டு, அரிசி மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு, எண்ணெய்
வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
பின்னர் மிளகாவை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின்னர் அரைத்த கலவையை கீறிய மிளகாயின் நடுவில் வைக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா வைத்த மிளகாவை பஜ்ஜி மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மொறுமொறு பஜ்ஜி ரெடி. எடுத்து பரிமாறிக்கொள்ளலாம்.