சுவையான பச்சைப்பயிறு புட்டு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பச்சைப்பயிறு, தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, நெய் ஆகியவை.
செய்முறை: பச்சைப்பயிறை நன்றாக நீரில் கழுவி, இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் போட்டு வெயிலில் நன்றாக காயவிட வேண்டும்.
பின்னர் அடுப்பில் கடாயை வைத்து, பச்சைப் பயிறை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, நன்றாக வறுக்கவும்.
வறுத்த பின்னர் அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் கழித்து மிக்சியில் போட்டு புட்டு மாவு பதத்தில் அரைக்கவும்.
அதன் பின்னர் சிறிது தண்ணீர் கலந்து மாவை கையால் கிளற வேண்டும். அதை குக்கர் அல்லது இட்லிப் பானையில் ஆவியில் வேகவிடவும்.
இப்போது மாவுடன் நெய், ஏலக்காய், தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்து கிளறவும். சுவையான புட்டு தயார்.
முளைகட்டிய பயிறு புட்டில் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் இருப்பதால் அவர்களுக்கும் சாப்பிடக் கொடுக்கலாம்.