சுவையான தூத்துக்குடி மக்ரூன் வீட்டிலேயே செய்வது எப்படி?
தூத்துக்குடியில் பேமஸ் தின்பண்டமாக மக்ரூன் திகழ்கிறது. அதை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
தேவையான பொருட்கள்: சர்க்கரை, முந்திரி, முட்டை ஆகியவை.
செய்முறை : முதலில் முந்திரி பருப்பை மிக்சியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும்.
பிறகு பவுல் ஒன்றில், முட்டையை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து க்ரீம் பதம் வரும் வரை தொடர்ச்சியாக கிளற வேண்டும்.
பிறகு, பொடித்த முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்ததாக, மைக்ரோ ஓவனை 5 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் மாவை பிளாஸ்டிக் கவரில் நிரப்பி, அதன் அடியில் ஓட்டை போட்டு, டிரேவில் உள்ள பட்டர் பேப்பரில் மாவை முக்கோண வடிவத்தில் பிழிந்துகொள்ள வேண்டும்.
இதை குறைந்த வெப்பநிலையில் மைக்ரோ ஓவனில் 40 நிமிடம் வைத்திருந்தால், சுவையான தூத்துக்குடி மக்ரூன் ரெடி.