தீபாவளி: 10 நிமிடத்தில் காஜு கத்லி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : முந்திரி பருப்பு, சர்க்கரை, நெய், தண்ணீர்
முந்திரி பருப்பை நன்கு அரைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகு தயாரிக்கவும்
பின்னர் தீயை மிதமாக வைத்து, சர்க்கரை பாகில் முந்திரி பருப்பு பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்
கைவிடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் கையில் ஒட்டாத பதத்திற்கு வரும், அப்போது நெய் சேர்த்து கிளறவும்
பின்னர் அடுப்பை ஆப் செய்துவிட்டு சில நிமிடங்கள் கைவிடாமல் கிளறினால் பக்குவமாக வரும்.
இப்போது நெய் தடவிய தட்டில் கலவையை கொட்ட வேண்டும்.
கை பொறுக்கும் பதத்திற்கு ஆறியதும், மேலும் சிறிது நெய் சேர்த்து நன்றாக பிசையவேண்டும்
பின்னர் சப்பாத்தி கட்டையில் வைத்து சற்று தடிமனாக தேய்த்து, கத்தியால் டைமண்ட் வடிவில் வெட்டவேண்டும்
இப்போது சுவையான மிருதுவான தீபாவளி காஜு கத்லி தயார்.