காரைக்குடி சுவையான காளான் தொக்கு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: காளான், பெரிய வெங்காயம், தக்காளி, உப்பு, எண்ணெய், பட்டை, லவங்கம் ஆகியவை.
வறுத்து அரைக்க: தனியா, மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு.
முதலில் காளானை நீளமாகவும், வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்பு சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும்.
பின்னர் வறுத்து அரைத்த கலவையைப்போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடி.