காரசாரமான வெங்காய மாங்காய் தொக்கு செய்வது எப்படி..!
அரை கிலோ பெரிய வெங்காயம் மற்றும் புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோல் நீக்கி துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய மாங்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.
இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.
இப்படி செய்தல் சுவையான வெங்காய மாங்காய் தொக்கு ரெடியாகிவிடும்.