காரசாரமான பன்னீர் பட்டர் மசாலா வீட்டிலேயே செய்வது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஆரோக்கியமான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பன்னீர், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், வெண்ணெய், ப்ரெஷ் கிரீம், உப்பு தேவையான அளவு
செய்முறை : பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.
முதலில் வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை மிதமாக வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, ஆகியவை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
பின்னர் ப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.