தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமா?
தினமும் பப்பாளி சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.
மாலை கண், கிட்ட பார்வை, தூர பார்வை போன்ற பிரச்சினை ஏற்படாமல் பப்பாளி தடுக்க உதவி செய்யும்.
பப்பாளியில் உள்ள நார்ச்சத்தானது உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவும்.
ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து புற்றுநோயை உண்டாக்கும் டாக்ஸின்களை உடலிலிருந்து வெளியேற்றி புற்று நோயை தடுக்க உதவி செய்யும்.
பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சரியாக இயக்க செய்கிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்கலாம்.