இதை பின்பற்றினால் தூக்கமின்மைக்கு தீர்வு காணலாம்...!
எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை, சோர்வு ஆகிய இரண்டும் தூக்கமின்மையின் முக்கிய அறிகுறிகள்.
பொதுவாக நீல வண்ணத்தை வெளியிடும் கருவிகள் நம் மூளைக்குள் கதிர்வீச்சுகளைச் செலுத்தி தூக்கத்தைப் பறிக்கின்றன.
ஸ்மார்ட்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இந்த நீல வண்ணத்தை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மற்ற சாதனங்களை விட ஸ்மார்ட்போனில்தான் அதிகமாக மூழ்கிக்கிடக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால் அன்றைய நாளில் ஒன்றரை மணி நேர தூக்கத்தை நீங்கள் இழக்க நேரிடும்.
இதனால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்தால் உங்களின் தூக்கப் பிரச்சினையைத் தீர்க்கலாம்.