பொள்ளாச்சியில் தி.மு.க.வில் மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது.

இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.
பா.ஜனதா மகளிர் அணி மாநில செயலாளர் மைதிலி உள்பட 55 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.
நீங்கள் வருகின்ற இடத்திற்கு தான் வந்து இருக்கிறீர்கள். நான் உங்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சி, எனது மகிழ்ச்சியை பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது. பொள்ளாச்சியில் இருக்கிற இந்த ஆச்சிப்பட்டி ஆச்சரியப்பட்டியாக எனக்கு காட்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் நமது நாட்டின் ஒருமைபாட்டிற்கும் இந்த கொள்கைகள் சிறந்த கொள்கைகளாக தி.மு.க. கொள்கைகளாக செயல்பட்டு எண்ணி வருகிறோம்.
தி.மு.க. தொடங்கி 18 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தோம். ஆனால் இப்போம் கட்சி தொடங்கியதும் நாங்கள் தான் அடுத்த ஆட்சி என்று சொல்கிறார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே நாங்கள் தான் முதல்-அமைச்சர் என்று கூறி வருகின்றனர்.
நம்மை போல வெற்றி பெற்ற கட்சி நாட்டில் எதுவும் இல்லை. நம்மை போல தோற்ற கட்சியும் இந்த நாட்டில் எதுவும் இருக்க முடியாது. இரண்டிலும் நமக்கு தான் பெருமை.
நாம் அடையாத புகழும் இல்லை. நாம் படாத அவமானமும் கிடையாது. நாம் செய்யாத சாதனைகளும் இல்லை. அடையாத வேதனைகளும் கிடையாது.
இந்த இயக்கம் 70 ஆண்டுகளை கடந்து நிலைத்து நீடித்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் நாம் கொள்கைகாரர்கள் என்பதால் தான். தி.மு.க. என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை கோட்டை. இங்கு நீங்கள் கட்சிக்காக அல்ல. கொள்கைக்காக செயல்பட வேண்டும்.
என்னிடம் நெருங்கி இருக்கும் சிலர் நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்வேன். நான் சொல்லி செய்கிறவன் அல்ல. சொல்லாமல் செய்பவன்.
எதிர்க்கட்சிகளின் அவதூறுகள், பழிச்சொற்களுக்கு எனக்கு பதில் சொல்ல நேரமில்லை. ஆட்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 20 மணி நேரம் உழைக்கிறேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் எந்த இயக்கத்தில் இருந்து வந்தீர்கள் என்பது எனக்கு தெரியும். அந்த இயக்கத்தையும், தலைவர்களையும் விமர்சிக்க நான் எனது நேரத்தை செலவு செய்ய போவதில்லை.
பொள்ளாச்சியில் நடைபெற்ற தி.மு.க நிகழ்ச்சியையொட்டி சாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி
நலத்திட்ட உதவி வழங்கும் விழா முடிந்த உடன் கட்டிவைக்கப்பட்டு இருந்த வாழைத்தார்களில் இருந்து வாழை குலைகளை கூட்டத்துக்கு வந்த பெண்கள் எடுத்துச் சென்றனர்.