பரபரப்பாக நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி...படுதோல்வியடைந்த இந்தியா!
@afp
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது.
@afp
இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி, 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி, 3-வது போட்டி மழை காரணமாக டிரா, 4-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி.
@afp
இந்நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியான சிட்னியில் களமிறங்கியது இந்தியா
@afp
மோசமான பார்ம் காரணமாக ரோகித் விலகிய நிலையில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.
@afp
அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி
@afp
பும்ராவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி அணியை வழிநடத்தினார்.
@afp
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கவாஜா, டிராவிஸ் ஹெட், வெப்ஸ்டர் ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தனர்.
@afp
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பையை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி அசத்தியது.
@afp
அத்துடன் இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
@afp
இந்த போட்டியில் தோல்வியடைந்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது.