இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது

PTI
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நடந்தது.
PTI
தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் முதல்முறையாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.
PTI
இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கேப்டன் லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.
PTI
இருவரும் தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தனர். 15 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 63 ரன் எடுத்தனர்.
AFP
அடுத்து இஷான் கிஷன், சுப்மான் கில்லுடன் கைகோர்த்தார். இருவரும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.
PTI
நிலைத்து நின்று ஆடிய சுப்மான் கில் 82 பந்துகளில் (12 பவுண்டரியுடன்) தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
AFP
50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிராட் இவான்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
PTI
பின்னர் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன.
AFP
இருப்பினும் 5-வது வீரராக களம் கண்ட சிகந்தர் ராசா நிலைத்து நின்று அதிரடியாக ஆடி அச்சத்தை ஏற்படுத்தினார். அவர் 88 பந்துகளில் தனது 6-வது சதத்தை எட்டினார்.
AFP
அணியின் ஸ்கோர் 275 ரன்னாக உயர்ந்த போது (48.4 ஓவரில்) சிகந்தர் ராசா 115 ரன்னில் (95 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அத்துடன் அந்த அணியின் நம்பிக்கை குலைந்தது.
PTI
கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. 49.3 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 276 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
AFP
இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
AFP
இந்திய வீரர் சுப்மான் கில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். ஜிம்பாப்வே மண்ணில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மால் கில் தனதாக்கினார்.
இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு புலவாயோவில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய ஜாம்பவான் தெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 127 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 24 ஆண்டு கால சாதனையை சுப்மான் கில் தகர்த்தார்.
AFP